வாடிப்பட்டி, ஆக. 3: ஈரோடு மாவட்டம் அரவன்காட்டுவலசு கிராமத்தைச் சேர்ந்தவர் பழனிச்சாமி(47). லாரி டிரைவரான இவர், நேற்று முன்தினம் கங்கைகொண்டானிலிருந்து திருப்பூருக்கு லோடு ஏற்றிச் சென்றுள்ளார். நள்ளிரவில் மதுரை – திண்டுக்கல் நான்கு வழிச்சாலையில் சாணாம்பட்டி அருகே லாரியை நிறுத்திவிட்டு தூங்கினார். அங்கு வந்த சுமார் 35 வயது மதிக்கத்தக்க இரண்டு நபர்கள் டிரைவர் பழனிச்சாமியை தாக்கி அவர் கையில் இருந்த ரூ.25 ஆயிரம் மற்றும் செல்போனை பறித்துச் சென்றனர். அவர்களின் தாக்குதலில் காயமடைந்த பழனிச்சாமி வாடிப்பட்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். அவர் கொடுத்த புகாரின் பேரில் வாடிப்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.
டிரைவரிடம் வழிப்பறி இருவருக்கு வலை
previous post