உடுமலை, ஆக. 2: உடுமலையில் நான்கு வழிச்சாலை அமைக்கும் பகுதியில் மின்வாரிய பணியாளர்கள் ரோந்து சென்றனர். அப்போது, டிரான்ஸ்பார்மரை ஆப் செய்துவிட்டு, ஒரு வாலிபர் காப்பர் கம்பிகளை திருடுவது தெரியவந்தது. உடனடியாக அவரை பிடித்து, உடுமலை காவல்நிலையத்தில் ஒப்படைத்தனர். விசாரணையில், அவர் திருப்பூர் கொசவம்பாளையத்தை சேர்ந்த கார்த்திகேயன் (29) என தெரியவந்தது. மின்வாரிய உதவி செயற்பொறியாளர் ராஜாமணி புகாரின்பேரில், போலீசார் கார்த்திகேயனை கைது செய்தனர்.