தண்டராம்பட்டு, ஜூன் 11: தண்டராம்பட்டு அடுத்த கீழ் வணக்கம்பாடி ஊராட்சிக்கு உட்பட்ட துள்ளுக்குட்டிபாளையம் கிராமத்தைச் சேர்ந்த பன்னீர் (47)விவசாயி. இவர் அதே பகுதியில் செங்கல் சூளை வைத்து நடத்தி வருகிறார். கடந்த 8ம் தேதி இரவு டிராக்டரை செங்கல் சூளை அருகில் நிறுத்திவிட்டு வீட்டுக்கு சென்றுவிட்டார். மறுநாள் காலை சென்று பார்த்தபோது அங்கு டிராக்டர் இல்லை. இதுகுறித்து பன்னீர் தண்டராம்பட்டு காவல் நிலையத்தில் புகார் அளித்ததன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர். நேற்று மாலை தென்முடியனூர் பகுதியில் உள்ள கறி கடையில் வாலிபர்கள் பேசிக் கொண்டிருந்ததை கேட்ட அப்பகுதியை சேர்ந்தவர்கள் காவல் நிலையத்தில் தகவல் அளித்ததன்பேரில் விரைந்து சென்று வாலிபர்களிடம் விசாரணை செய்தபோது அகரம் பள்ளிப்பட்டு கிராமத்தை சேர்ந்த ஜீவா(35), நாளால் பள்ளம் கிராமத்தைச் சேர்ந்த உதயகுமார்(25) என தெரிய வந்தது. அவர்களை கைது செய்து தண்டராம்பட்டு போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.
டிராக்டர் திருடிய இருவர் கைது
0