தர்மபுரி, ஆக. 3: தர்மபுரி மதிகோண்பாளையம் எஸ்ஐ சேகர் மற்றும் போலீசார், நேற்று முன்தினம் ரோந்து சென்றனர். அப்போது எட்டிமரத்துப்பட்டி கலெக்ட்ரேட் ரோடு பகுதியில், வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அவ்வழியாக வந்த டிப்பர் லாரியை நிறுத்தி சோதனை செய்தனர். அதில், ₹2 ஆயிரம் மதிப்பிலான கற்களை கடத்தி செல்வது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து லாரி டிரைவரிடம் விசாரித்த போது, அவர் தர்மபுரி வேடியப்பன்திட்டு பகுதியை சேர்ந்த அருண்குமார் என்பது தெரிந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்து, லாரியை பறிமுதல் செய்தனர்.
டிப்பர் லாரியில் கற்கள் கடத்திய டிரைவர் கைது
previous post