மதுரை, மே 24: மதுரை கோட்டத்தில் இயங்கும் அரசு பஸ்களில், டிஜிட்டல் பண பரிவர்த்தனை மூலம் டிக்கெட் வழங்கும் வசதி செய்யப்பட்டுள்ளது. இதனால், சில்லறை தட்டுப்பாடு இல்லாமல் பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். தமிழகத்தில் வாடிக்கையாளர்கள் பொருட்கள் வாங்க பணம் செலுத்துவதற்கு மாற்றாக டிஜிட்டல் பண பரிவர்த்தனைகள் அதிகரித்துள்ளது. தற்போது, பெட்டிக்கடை, பூக்கடை, பழக்கடை முதல் கிராம பகுதிகளிலும் இந்த நடைமுறை சென்றடைந்துள்ளது. ரூபாய் நோட்டுக்களின் புழக்கத்தை குறைக்க வேண்டும் என்ப