நெல்லை, பிப்.15: நெல்லை சரகத்தில் கடந்த சில மாதங்களில் பறிமுதல் செய்யப்பட்ட சுமார் 362 கிலோ கஞ்சா நேற்று விஜயநாராயணம் அருகே தனியார் கம்பெனியில் எரித்து அழிக்கப்பட்டது. நெல்லை சரகத்திலுள்ள நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மற்றும் கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் 118 வழக்குகளில் சுமார் 362.243 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. இவற்றை ஒரே இடத்தில் வைத்து எரித்து அழிக்குமாறு நெல்லை டிஐஜி மூர்த்தி, போலீஸ் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். இதனையடுத்து விஜயநாராயணம் அருகேயுள்ள பொத்தையடி கிராமத்தில் அமைந்துள்ள தனியார் கம்பெனியில் 4 மாவட்டங்களில் பறிமுதல் செய்யப்பட்ட 362.243 கிலோ கஞ்சா நெல்லை சரக டிஐஜி மூர்த்தி தலைமையிலும், நெல்லை எஸ்பி சிலம்பரசன் முன்னிலையிலும், நாங்குநேரி ஏஎஸ்பி பிரசன்னகுமார் மேற்பார்வையில் தடயவியல் துறை அதிகாரி வினிதா மற்றும் போலீசார் அழிக்கப்பட்டது. வருகிற 24ம் தேதி முதல்வர் மு.க.ஸ்டாலின் துவக்கி வைக்கிறார்
டிஐஜி மூர்த்தி தலைமையில் நெல்லை சரகத்தில் பறிமுதல் செய்த 362 கிலோ கஞ்சா அழிப்பு
0