காங்கயம், செப். 7: ஊதியூர் அருகே உள்ள நொச்சிப்பாளையம் டாஸ்மார்க் கடையில் அதே பகுதியைச் சேர்ந்த டிரைவர் பிரகாஷ் (30) என்பவர் மது குடித்து கொண்டிருந்தார். அதே டாஸ்மாக் கடையில் தாளக்கரையை சேர்ந்த சிலர் மது அருந்திக் கொண்டு, சத்தம் போட்டு பேசி கொண்டிருந்தனர். அருகில் இருந்த பிரகாஷ் சத்தம் போடாமல் இருக்குமாறு கூறி உள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த கும்பல், பீர்பாட்டிலை எடுத்த பிரகாஷின் தலையில் அடித்தனர். இதில் காயமடைந்த அவர், தாராபுரம் அரசு மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற்றார். இது குறித்து தாளக்கரையைச் சேர்ந்த கவியரசு, லோகநாதன், விவேக், மனோகரன், தாமோதரன் ஆகியோர் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது. ஊதியூர் போலீசார் விசாரித்து வருகின்றனர்.