சேலம், செப்.2: இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் சேலம் சீலநாயக்கன்பட்டியில் செயல்பட்டு வரும் டாஸ்மாக் கடையை அகற்றகோரி முற்றுகை போராட்டம் நடத்தப்படுவதாக அறிவிப்பட்டிருந்தது. அதன்படி, நேற்று சீலநாயக்கன்பட்டியில் இந்தியகம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டசெயலாளர் மோகன் தலைமையில் 100க்கும்மேற்பட்டோர் திரண்டனர். பின்னர், அவர்கள்பொதுமக்களுக்கு இடையூறாகவும், போக்குவரத்து நெரிசல் ஏற்பட் காரணமாக இருக்கும் சீலநாயக்கன்பட்டி டாஸ்மாக் கடையை அகற்ற வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது. அப்போது அங்கு பாதுகாப்பில் ஈடுபட்ட போலீசார் மற்றும் டாஸ்மாக் அதிகாரிகள் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். அதில்,ஒரு மாதத்திற்குள் டாஸ்மாக் கடையைஅகற்றுவதாக அதிகாரிகள் உறுதியளித்தனர். இதையடுத்து முற்றுகை போராட்டம் ஒத்தி வைக்கப்பட்டதாக நிர்வாகிகள் தெரிவித்தனர்.
டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி இ.கம்யூனிஸ்ட் ஆர்ப்பாட்டம்
previous post