சேலம், ஆக. 13: சுதந்திர தினத்தையொட்டி வரும் 15ம் தேதி சேலம் மாவட்டத்தில் உள்ள டாஸ்மாக் கடைகளை மூட கலெக்டர் பிருந்தாதேவி உத்தரவிட்டுள்ளார். இதுதொடர்பாக கலெக்டர் பிருந்தாதேவி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ‘‘தமிழ்நாடு அரசால் வரும் 15ம் தேதி சுதந்திர தினத்தன்று மதுபானக்கடைகள் மூடப்பட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, சேலம் மாவட்டத்தில் உள்ள அனைத்து எப்.எல்.1, எப்.எல்.2, எப்.எல்.3. எப்.எல்.3ஏ மற்றும் எப்.எல்.3ஏஏ உரிமம் பெற்ற ஹோட்டல் மற்றும் கிளப்புகளில் இயங்கிவரும் மதுபானக்கூடங்கள், டாஸ்மாக் மதுபானக்கடைகள் (எப்.எல்.11) மற்றும் டாஸ்மாக் மதுபானக் கடைகளுடன் இணைந்துள்ள மதுபானக்கூடங்கள் அனைத்தும் வரும் 15ம் தேதி மூடப்பட வேண்டும். உத்தரவுகளை மீறி விற்பனை செய்பவர்கள் மீது அரசு விதிகளின்படி கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும்,’’ என தெரிவித்துள்ளார்.
டாஸ்மாக் கடைகள் 15ம் தேதி மூடல்
previous post