சிவகங்கை, ஜூன் 25: சிவகங்கை கலெக்டர் அலுவலகம் முன் சிஐடியு டாஸ்மாக் ஊழியர்கள் சங்கம் சார்பில் காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது. மாவட்டத்தலைவர் குமார் தலைமை வகித்தார். காரைக்குடி அருகே பள்ளத்தூரில் கடந்த 2023ம் ஆண்டு டாஸ்மாக் கடையில் பணியாற்றிய ஊழியர் பெட்ரோல் குண்டு வீச்சில் மரணம் அடைந்ததையொட்டி அவரது மனைவிக்கு அரசு வேலை வழங்க தமிழக முதல்வர் உத்தரவிட்ட நிலையில் உத்தரவு நிறைவேற்றாமல் காலம் தாழ்த்தி வரும் மாவட்ட நிர்வாகத்தை கண்டித்து போராட்டம் நடைபெற்றது.