வேலூர், ஜூன் 6: வேலூர் கோட்டை அருகே டாட்டூ குத்துவதில் ஏற்பட்ட தகராறில் தொழிலாளியை தாக்கிய 4 பேர் கைது செய்யப்பட்டனர். வேலூர் அரியூர் காந்தி நகரை சேர்ந்தவர் ரமேஷ். இவரது மகன் மகேஷ்(20). கூலி தொழிலாளி. இவர் வேலூர் கோட்டை காந்தி சிலை அருகே கடந்த 3ம் தேதி டாட்டூ போட்டுள்ளார். அப்போது டாட்டூ குத்தியவருக்கும் மகேசுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. தொடர்ந்து டாட்டூ குத்தியவர் அவரது நண்பர்களை வரவழைத்து மகேசை சரமரியாக தாக்கியதில் அவர் படுகாயமடைந்தார். இதுகுறித்து ரமேஷ் அளித்த புகாரின் பேரில் வேலூர் வடக்கு போலீசார், சலவன்பேட்டையைச் சேர்ந்த பூவரசன்( 22), சந்துரு(18), ஆகாஷ்(18), இசைப்பிரியன்(18) ஆகிய 4 பேர் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.
டாட்டூ குத்துவதில் தகராறில் கூலித்தொழிலாளி மீது தாக்குதல்
0