தர்மபுரி, ஜூன் 27: தர்மபுரி குமாரசாமிப்பேட்டையை சேர்ந்தவர் திருவரசன் (33). தர்மபுரி மாவட்ட சுகாதார அலுவலகத்தில் மருத்துவராக உள்ளார். கடந்த 23ம் தேதி இரவு, தனது வீட்டின் முன் டூவீலரை நிறுத்தியிருந்தார். மறுநாள் காலை பார்த்த போது, டூவீலரை காணவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த திருவரசன், தர்மபுரி டவுன் போலீசில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமிராக்களை ஆய்வு செய்தனர். அதில், சேலம் மாவட்டம் வாழப்பாடி அடுத்த அனுப்பூர் கிராமத்தை சேர்ந்த மோகன் (24) என்பவர், டூவீலரை திருடியது தெரிய வந்தது. இதையடுத்து, மோகனை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.