சேலம், ஜூலை 7: சேலம் அடுத்த வீராணம் பகுதியைச் சேர்ந்தவர் மூர்த்தி (41). இவர் நேற்று முன்தினம் மாலை பழைய பஸ் ஸ்டாண்டில் இருந்து புது பஸ் ஸ்டாண்ட் செல்வதற்காக டவுன் பஸ்சில் ஏறினார். டிவிஎஸ் பஸ் ஸ்டாப் அருகே வந்தபோது, திடீரென வாலிபர் ஒருவர் மூர்த்தியின் சட்டை ைபயில் இருந்து ₹300ஐ எடுக்க முயன்றார். அப்போது சுதாரித்துக் கொண்ட மூர்த்தி, அவரை கையும் களவுமாக பிடித்து பள்ளப்பட்டி போலீசில் ஒப்படைத்தார். அங்கு போலீசார் மேற்கொண்ட விசாரணையில், அவர் மெய்யனூர் இட்டேரி ரோட்டை சேர்ந்த அர்ஜூனன் (27) என்பது தெரியவந்தது. இதனையடுத்து அவரை ேபாலீசார் கைது செய்தனர்.
டவுன் பஸ்சில் பயணியிடம் ஜேப்படி செய்தவர் கைது
40
previous post