தேவாரம், நவ.14: தேனி மாவட்டத்தில் அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனைக்கு தினமும் அதிகமான நோயாளிகள் டயாலிஸிஸ் சிகிச்சைக்காக வருகின்றனர். தவிர பெரியகுளம், கம்பம், உத்தமபாளையம், சின்னமனூர், போடி, ஆண்டிபட்டி உள்ளிட்ட பகுதிகளில் அரசு மருத்துவமனைகள் உள்ளன. இப்பகுதிகளில் சர்க்கரை, ரத்த அழுத்தம், சிறுநீரகம் தொடர்பாக சிகிச்சை பெறுபவர் ஏராளமானோர் உள்ளனர். குறிப்பாக டயாலிஸிஸ் செய்யும் அளவிற்கு நோயின் தீவிரம் வரும்போது நோயாளிகள், ஆட்டோ, கார் உள்ளிட்ட வாடகை வாகனங்கள் மூலம் தேனிக்கு செல்ல வேண்டிய நிலை உள்ளது.
இதனால் நோயளிகள் கடும் அவதிக்குள்ளாகின்றனர். ஆகையால் அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் இதற்கென சிறப்பு பிரிவுகளை ஏற்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.