தேனி, ஜூன் 23: தேனி அருகே பழனிசெட்டிபட்டியில் பூட்டியிருந்த ஜோதிடர் வீட்டிற்குள் புகுந்த மர்ம நபர்கள் வீட்டிலிருந்த 20 பவுன் நகைகளை கொள்ளையடித்து சென்றது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தேனி அருகே பழனிசெட்டிபட்டி பெரியார் 2வது தெருவில் குடியிருப்பவர் ராமாராவ்(47). இவர் ஜோதிடம் பார்க்கும் பணி செய்து வருகிறார். கடந்த 19ம் தேதி இரவு வீடடின் மேல் மாடியை பூட்டி விட்டு கீழே உள்ள பகுதியில் குடும்பத்துடன் தங்கியிருந்தார். நேற்று முன்தினம் வீட்டின் மேல்மாடிக்கு சென்றபோது, அங்கிருந்த கதவு திறக்கப்பட்டு இருந்தது அறிந்து, மாடி அறையில் இருந்த பீரோ உடைக்கப்பட்டு கிடந்தது. பீரோவை சரிபார்த்தபோது, பீரோவில் இருந்த சுமார் 20 பவுன் எடையுள்ள தங்க நகைகள் மற்றும் வெள்ளிப்பொருள்கள் கொள்ளை போனது தெரியவந்தது. இது குறித்து, ராமாராவ் பழனிசெட்டிபட்டி போலீசில் புகார் அளித்தார். இப்புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து திருட்டு குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.