திருப்பூர், செப்.15: ஜெய்வாபாய் மாநகராட்சி பள்ளியில் ரூ.1.66 கோடியில் 9 புதிய வகுப்பறை கட்டுமான பணிகளை செல்வராஜ் எம்எல்ஏ துவங்கி வைத்தார். திருப்பூர் தெற்கு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட ஜெய்வாபாய் மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில், நபார்டு திட்டத்தின் கீழ் பொதுப்பணித்துறை சார்பில் ரூ.1.66 மதிப்பில் 9 வகுப்பறைகள் கட்டுவதற்கான பணிகளை மாவட்ட திமுக செயலாளரும், எம்எல்ஏவுமான செல்வராஜ் அடிக்கல் நாட்டி துவங்கி வைத்தார்.
இதில் வடக்கு மாநகர திமுக செயலாளரும், மாநகராட்சி மேயருமான தினேஷ்குமார், துணை மேயர் பாலசுப்பிரமணியம், தெற்கு மாநகர திமுக செயலாளர் டி.கே.டி மு.நாகராசன் மற்றும் பகுதி செயலாளர்கள் மியாமி அய்யப்பன், மு.க.உசேன், மாவட்ட துணை செயலாளர்கள் டிஜிட்டல் சேகர், நந்தினி மற்றும் கவுன்சிலர்கள் திவாகரன், ராதாகிருஷ்ணன், பள்ளி தலைமை ஆசிரியர் ஸ்டெல்லா அமலோற்பவ மேரி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.