ஜெயங்கொண்டம் மே 15: ஜெயங்கொண்டம் நகர திமுக சார்பில் சாதனை விளக்கப் பொதுக்கூட்டம் நடைபெற்றது. ஜெயங்கொண்டம் நகரில், திராவிட மாடல் அரசின், \”நாடு போற்றும் நான்காண்டு சாதனை விளக்கப் பொதுக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு நகர செயலாளர் வெ.கொ.கருணாநிதி தலைமை வகித்தார். மாவட்ட பிரதிநிதி ராஜமாணிக்கம் வரவேற்றார். தலைமை கழக சொற்பொழிவாளர் முனைவர் விஜயராணி, தலைமை கழக இளம் பேச்சாளர் கனிமொழி, சட்டமன்ற உறுப்பினர் க.சொ.க.கண்ணன் ஆகியோர் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினர். இந்நிகழ்வில் தலைமை செயற்குழு உறுப்பினர் பாலசுப்ரமணியன், மாவட்ட துணை செயலாளர் கணேசன், பொதுக்குழு உறுப்பினர் பொய்யாமொழி மற்றும் ஜெயங்கொண்டம் நகர கழக நிர்வாகிகள், மாவட்ட அணி நிர்வாகிகள், கழக தோழர்கள், பொதுமக்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். நிறைவாக வட்ட கழக செயலாளர் சங்கர்(எ)நடராஜன் நன்றி கூறினார்.
ஜெயங்கொண்டம் நகர திமுக சார்பில் சாதனை விளக்கப் பொதுக்கூட்டம்
0