ஜெயங்கொண்டம், மே 24: அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் வட்டத்திற்கான ஜமாபந்தி கடந்த 20ம் தேதி துவங்கியது. உடையார்பாளையம் உள் வட்டத்திலுள்ள தேவமங்கலம், அங்கராயநல்லூர், சூரிய மணல், கச்சி பெருமாள், துளாரங்குறிச்சி, இடையார், வாணதிரையன் பட்டினம், பிலிச்சிகுழி, காங்கேயங்குறிச்சி, உடையார்பாளையம், த.சோழங்குறிச்சி, தத்தனூர் ஆகிய கிராமங்களுக்கான ஜமாபந்தி நேற்று அரியலூர் மாவட்ட வருவாய் அலுவலர் மல்லிகா தலைமையில் நடைபெற்றது. ஜெயங்கொண்டம் தாசில்தார் சம்பத்குமார் மற்றும் வருவாய் ஆய்வாளர்கள், கிராம நிர்வாக அலுவலர்கள், கிராம உதவியாளர்கள் கலந்து கொண்டனர்.
அப்போது பொதுமக் களிடமிருந்து இலவச வீட்டு மனை பட்டா, உதவித்தொகை, சிட்டா நகல், உட்பிரிவு அளந்து அத்து காட்டல், குடும்ப அட்டை மற்றும் சான்றுகள் கேட்டு 241 பேர் மனுக்கள் அளித்திருந்தனர். இவற்றில் 22 மனுக்களுக்கு உடனடியாக தீர்வு காணப்பட்டது. 12 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டது. மீதமுள்ள 207 மனுக்கள் விசாரணையில் உள்ளன. இந்நிலையில், வரும் 27ஆம் தேதி இறவாங்குடி, தண்டலை, கீழ குடியிருப்பு, பிரஞ்சேரி, பிச்சனூர், வெத்தியார் வெட்டு, ஆமணக்கந்தோன்டி, உட்கோட்டை, பெரியவளையம் உள்ளிட்ட கிராமங்களுக்கான ஜமாபந்தி நடைபெற உள்ளது.