ஜெயங்கொண்டம் ஜூன் 3: இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் ஜெயங்கொண்டம் ஒன்றிய கமிட்டி கூட்டம் கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. பன்னீர்செல்வம் தலைமை வகித்தார். கூட்டத்தில் ஒன்றிய செயலாளர் நடராஜன் துணைச் செயலாளர் காத்தவராயன், நாகராஜன், கலியமூர்த்தி, அன்பழகன், ராஜாராமன், சபாபதி, வடிவேலு, முத்துராமன், இறைக்கோ உள்ளிட்ட தோழர்கள் கலந்து கொண்டனர். ஒன்றிய செயலாளர் வேலை அறிக்கை முன்வைத்து பேசினார். வேலை அறிக்கை ஏகமனதாக ஏற்றுக் கொள்ளப்பட்டது. தீர்மானங்கள், இளையபெருமாள் நல்லூர் ஊராட்சி பள்ளி விடையில் இருளர் குடும்பங்கள் வாழ்ந்து வந்த நாலே முக்கால் ஏக்கர் அரசு நத்தம் புறம்போக்கு நிலத்தை இருளர் குடும்பங்களுக்கே வீட்டுமனை வழங்க வேண்டும். உடையார்பாளையம் காந்தி நகரில் 20 ஆண்டுகளுக்கு மேலாக வீடு கட்டி வாழ்ந்து வரும் ஏழை குடும்பங்களுக்கு வீட்டு மனை கேட்டும் முத்து சேர்வா மடம் ஊராட்சி சம்போடையிலிருந்து கங்கைகொண்ட சோழபுரம் மேல்நிலைப்பள்ளிக்கு மாணவர்கள் வருவதற்கான நடைபாதையை தனிநபர் ஆக்கிரமித்து உள்ளதை அகற்றி நடைபாதை அமைத்து தரவேண்டும், ஜூலை மாதம் 15 ம் தேதி உடையார்பாளையம் கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு கோரிக்கை நிறைவேறும் வரை காத்திருப்பு போராட்டம் நடத்துவது என்று தீர்மாணிக்கபட்டுள்ளது.
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி அளிப்பு சட்டத்தின் படி 200 நாட்கள் வேலை தர வேண்டும் ரூ.700 சம்பளம் கேட்டும் நகராட்சி பேரூராட்சி பகுதிகளுக்கும் 100 நாள் வேலையை விரிவாக்கம் செய்ய வேண்டும், ஜூன் 10ம் தேதி ஜெயங்கொண்டம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று தீர்மானிக்கப்பட்டது. உடையார்பாளையம் மருத்துவமனை விரிவாக்கத்திற்கு ஒதுக்கப்பட்ட நாலரை கோடி ரூபாய் உடையார்பாளையத்தில் மருத்துவமனை எதிரில் உள்ள அரசு நிலத்தில் புதிய மருத்துவமனை கட்டிடங்கள் கட்டி மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும். ஒதுக்கப்பட்ட நிதியை வேறு பகுதிக்கு எடுத்து சென்று மருத்துவமனை கட்டக்கூடாது என்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பாக கேட்டுக்கொள்வது, மேல குடியிருப்பில் தனியார் கட்டிடத்தில் செயல்பட்டு வரும் சார் பதிவாளர் அலுவலகத்தை பழைய நீதிமன்ற கட்டிடத்தில் செயல்பட வைத்தால் பொதுமக்களும் விவசாயிகளும் பயன்பெறுவார்கள் அரசு தனியார் கட்டிடத்திற்கு வாடகை கட்ட தேவையில்லை என உடனடியாக சார்பாதிவாளர் அலுவலகத்தை பழைய நீதிமன்ற கட்டிடத்திற்கு மாற்ற கலெக்டர் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பொன்னாற்று கால்வாயில் இருந்து பொன்னேரி வரை இருந்த கொள்ளிடம் நீர் வறுத்து வாய்க்கால் கால்வாய் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு உள்ளது மீண்டும் பொன்னாற்று கால்வாயில் இருந்து பொன்னேரிக்கு கால்வாய் வெட்டி நீரை நிரப்பினால் பொன்னேரிக்கு கிழக்கே உள்ள 5ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும், தமிழ்நாடு அரசும் பொதுப்பணி துறையும் உடனடியாக கால்வாய் இருந்த இடத்தை ஆக்கிரப்பையாளர்களை அகற்றி கால்வாய் வெட்டி நீர் வரத்து பொன்னேரிக்கு வர நடவடிக்கை எடுக்க வேண்டும். பொன்னேரியை தூர்வாரி கரைகளை பலப்படுத்தி படகு சவாரியுடன் சுற்றுலாத்தலமாக மாற்றினால் உலக நாடுகளில் இருந்தும் இந்தியா முழுமையிலிருந்தும் வரக்கூடிய சுற்றுலாப் பயணிகள் கண்டுகளிக்க வாய்ப்பாக அமையும் சுற்றுலாத் துறைக்கு வருமானம் அதிகமாக பெருகும் எனவே பொன்னேரியை படகு சவாரியுடன் சுற்றுலாத்தலமாக மாற்றி அமைக்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. ஒன்றிய துணை செயலாளர் காத்தவராயன் நன்றி கூறினார்.