ஜெயங்கொண்டம், மே 25: ஜெயங்கொண்டம் அருகே லாரி டிரைவர் மனைவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள தென்னவநல்லூர் காலனி தெருவை சேர்ந்தவர் செல்வம் (35). இவர் லாரி டிரைவராக வேலை பார்த்து வருகிறார். இவருடைய மனைவி சுகன்யா தேவி (29). இவர்களுக்கு ஒரு மகளும், மகனும் உள்ளனர். லாரி டிரைவர் செல்வம் தனது தம்பி மற்றும் பெற்றோர்களிடம் கருத்து வேறுபாடு காரணமாக பேச்சுவார்த்தை இல்லாமல் தனியே இருந்து வந்ததாக தெரிகிறது. இந்நிலையில்,
நேற்று முன்தினம் செல்வம் லாரி ஓட்ட சென்று விட்டு, மீண்டும் இரவு ஒரு மணி அளவில் வீட்டிற்கு வந்த போது தனது மனைவி புடவையால் தூக்கிட்டு தற்கொலை செய்த கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். தகவலின் பெஎரில் சம்பவ இடத்திற்கு வந்த மீன்சுருட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் பிரகாஷ் சுகன்யா தேவியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்