ஜெயங்கொண்டம், மே 21: அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே இலையூர் கிராமம் செக்கடித் தெருவை சேர்ந்த சின்னப்பொண்ணு(55) விவசாயக் கூலி தொழிலாளி. இவர் மாடுகளை வைத்து பிழைப்பு நடத்தி வருகிறார்.நேற்று முன்தினம் தனது சினை பசுமாட்டை மேய்ச்சலுக்காக வயலில் கட்டி வைத்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு விட்டு விட்டு பெய்த மழை காரணமாக வயலில் மேய்ந்து கொண்டிருந்த சினைப்பசு மாடு மீது இடிமின்னல் தாக்கியது. இதில் பசுமாடு துடிதுடித்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தது. சத்தம் கேட்டு ஓடி பார்த்த போது மாடு மின்னல் தாக்கி உயிரிழந்தது தெரியவந்தது.