ஜெயங்கொண்டம், ஜூன் 2: அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் பாட்டாளி மக்கள் கட்சியின் அரியலூர் மாவட்ட செயற்குழு கூட்டம் அன்புமணி ராமதாஸால் நியமிக்கப்பட்ட மாவட்ட செயலாளர் தமிழ் மறவனுக்கு பதிலாக டாக்டர் ராமதாஸால் மாவட்ட செயலாளராக நியமிக்கப்பட்ட காடுவெட்டி ரவி தலைமையில் நடைபெற்றது . இக்கூட்டத்தில் மாநில வன்னியர் சங்க தலைவர் பூ.தா. அருள்மொழி கலந்து கொண்டு வன்னியர் சங்க செயல்பாடு குறித்து பல்வேறு ஆலோசனைகளை வழங்கினார் .
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த பூ.தா.அருள்மொழி கூறியதாவது:
வன்னியர் சங்கம் பாட்டாளி மக்கள் கட்சியும் எந்த விதமான தொய்வும் இல்லாமல் மக்கள் பணியாற்ற இப்போது ஆயத்தமாகிவிட்டது. கட்சியையும் சங்கத்தையும் உருவாக்கியவரே டாக்டர் ஐயா தான், அவர்தான் நம்முடைய தலைவர். அவர் உருவாக்கிய இந்த அமைப்பில் சலசலப்பு இருப்பதாக கூறுகிறார்கள் ஒரு சலசலப்பும் கிடையாது. ஐயாவை ஏற்றுக் கொள்பவர்கள் அனைவரும் இங்கே இருக்கிறோம் ஐயா மேல குறை சொல்பவர்கள் வெளியே போயிட்டதா தான் சொல்கிறார்கள். அன்புமணி ராமதாஸ் நியமிக்கப்பட்ட மாவட்ட செயலாளருக்கு பதிலாக டாக்டர் ராமதாஸால் நியமிக்கப்பட்ட மாவட்ட செயலாளர் தலைமையில் செயற்குழு கூட்டம் நடைபெற்று வருவது குறித்த கேள்விக்கு எங்களுக்கு வந்து மாவட்ட செயலாளர் இவர் தான்.
அன்புமணியால் நியமிக்கப்பட்ட மாவட்ட செயலாளர் தமிழ்மறவன் மாறிவிட்டார் என கூறினார். பூம்புகார் மகளிர் மாநாடு நடக்க இருக்கிறது அந்த மாநாட்டின் மூலமாக மகளிர் ஒன்று சேர்ந்து தங்களுக்கான ஒற்றுமையை ஏற்படுத்தி சம்பாதிக்க வேண்டும் என்ற எண்ணத்தை உருவாக்குவார்கள். அன்புமணி ராமதாஸ் தலைவர் இல்லை நானே தலைவர் என டாக்டர் ஐயா சொல்லிவிட்டார் அப்புறம் ஏன் நான் தலைவர் நான் தலைவர் என அவர் சொல்கிறார் நான் அன்புமணிக்கு அறிவுரை கூறுவதென்றால் டாக்டர் ஐயாவின் பேச்சை கேட் நட உங்க அப்பா பேச்சை கேட்டு தான் தமிழ்நாட்டிலுள்ள நாங்க எல்லாரும் நடக்கிறோம் நீயும் அப்படியே நட. உனக்கு பெரிய முக்கியத்துவம் கிடைக்கும். உன்னை முதலமைச்சராக்குவதாக டாக்டர் ஐயா கூறுகிறார். அதை வாங்கிட்டு போயேன் நீ எங்களோடு ஐயாவை வணங்கி ஏற்றுக் கொண்டால் உனக்கு தான் முதலமைச்சர் உனக்கு தான் இந்த தமிழ்நாடு என கூறினார்.