விருதுநகர், ஜூலை 4: விருதுநகர் மாவட்டத்தில் ஜூலை 15 முதல் உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடைபெற உள்ளது. மாவட்டத்தில் மொத்தம் 349 முகாம்கள் நடைபெற உள்ளன.
விருதுநகர் கலெக்டர் அலுவலகத்தில் உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடத்துவது தொடர்பான ஆலோசனை கூட்டம் கலெக்டர் சுகபுத்ரா தலைமையில் நடைபெற்றது. மாவட்டத்தில் 349 முகாம்கள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. சிவகாசி மாநகராட்சியில் 32 முகாம்களும், 5 நகராட்சிகளில் 70 முகாம்களும், கிராம ஊராட்சி பகுதிகளில் 229 முகாம்களும் என 349 முகாம்கள் நடத்தப்பட உள்ளது. முகாம் வரும் ஜூலை 15 முதல் நவ.7 வரை நடத்தப்பட உள்ளது. முகாமில் நகரப்பகுதிக்கு 13 துறைகள் மூலம் 43 சேவைகளும், கிராமப்பகுதிகளில் 15 துறைகள் மூலம் 46 சேவைகளும் மேற்கொள்ளப்பட உள்ளது. கூட்டத்தில் டிஆர்ஓ ராஜேந்திரன், திட்ட இயக்குநர் தண்டபாணி, தனித்துறை ஆட்சியர் காளிமுத்து, நேர்முக உதவியாளர் பிரதௌஸ் பாத்திமா உட்பட பலர் கலந்து கொண்டனர்.