சிவகங்கை, ஜூலை 3: சிவகங்கை பையூர் பிள்ளைவயல் காளியம்மன் கோயிலில் 71வது ஆண்டு பூச்சொரிதல் விழா ஜூலை 11 அன்று நடக்க உள்ளது. சிவகங்கையில் இந்து சமய அறநிலையத்துறைக்குட்பட்ட பிள்ளைவயல் காளியம்மன் கோவில் உள்ளது. இங்கு ஆண்டுதோறும் ஆனி மாதம் பூச்சொரிதல் விழா நடந்து வருகிறது. இந்த ஆண்டு நாளை (ஜூலை 4) காலை 9.15 மணிக்கு மேல் 10.15 மணிக்குள் காப்புக்கட்டுதலுடன் விழா தொடங்குகிறது. மாலை பூக்குழி இறங்கும் நிகழ்ச்சி நடக்க உள்ளது. ஜூலை 9 அன்று காலை 7 மணி முதல் மாலை 7 மணி வரை ஏகதின லட்சார்ச்சனை நடைபெற உள்ளது. ஜூலை 11 வெள்ளிக்கிழமை காலை சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற உள்ளன. தொடர்ந்து மாலை பிரசித்தி பெற்ற பூச்சொரிதல் விழா நடக்க உள்ளது. அன்று நேர்த்திக்கடன் அடிப்படையில் பொங்கல், மாவிளக்கு வைத்தல் மற்றும் பிள்ளை தொட்டி கட்டுதல் உள்ளிட்டவைகள் நடைபெறும். ஏற்பாடுகளை அறநிலையத்துறை நிர்வாகம் மற்றும் விழாக்குழுவினர் செய்கின்றனர்.
ஜூலை 11ல் பூச்சொரிதல் விழா
0
previous post