மன்னார்குடி, மே 30: தமிழகத்தில் உள்ள அரசு,அரசு உதவி பெறும் மற்றும் தனியார் பள்ளிகளுக்கு கோடை விடுமுறைகள் விடப் பட்டு ஜூன் 2-ம் தேதி அனைத்து பள்ளிகளும் திறக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. இது குறித்து பள்ளிக் கல்வித்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியுள்ளதாவது, பள்ளிகளில் உள்ள அனைத்து வகுப்பறைகள், தலைமை ஆசிரியர் அறைகள், அறிவியல் ஆய்வகம் உள்ளிட்ட பிற அறைகள், பள்ளி வளாகம் நன்கு தூய்மை செய்யப்பட்டு இருப்பதை உறுதி செய்ய வேண்டும். பள்ளிக் கட்டிடத்தின் மேற்பரப்பில் குப்பைகள் அகற்றப்பட்டு மழை நீர் தேங் காத வண்ணம் மழை நீர் வெளி யேற வழிவகை செய்திட வேண்டும். மழை நீர் சேகரிப்புத் தொட்டி சரியான பராமரிப்பிலும், பயன்பாட்டிலும் உள்ளதா என் பதனை உறுதி செய்ய வேண்டும்.
சமையலறை நன்கு சுத்தம் செய்யப்பட்டு, பாத்திரங்கள் நன்கு கழுவப்பட்டு இருப்பதனை உறுதி செய்திட வேண்டும். பள்ளி வளாகம் முழுவதும் குப்பை கள் இல்லாமல் சுத்தமாக இருப்பதை உறுதி செய்திட வேண்டும். மாணவர் சேர்க்கை கொண்டாட்டம் பள்ளி திறந்த முதல் நாள் அன்றே நடத்தப்பட வேண்டும். இல்லம் தேடிக் கல்வித் திட்டத்தின் தன்னார்வலர்களால் கண்டறியப்பட்ட பள்ளி வயது குழந்தைகளை அரசு பள்ளிகளில் சேர்த்திட வேண்டும். பள்ளி கள் திறந்த அன்றே மாணவர்களுக்கு பாடப் பத்தகங்கள், குறிப்பேடுகள் உள் ளிட்ட விலையில்லா பொருட்களை வழங்கிட வேண்டும் என பல்வேறு வழி காட்டு அறிவுரைகளை பள்ளிக் கல்வித்துறை கல்வி அதிகாரிகளுக்கும், தலை மை ஆசிரியர்களுக்கும் வழங்கி உள்ளது. அதன்படி, மன்னார்குடி ஒன்றியத்தில் இருந்து வரும் 121 அரசு , அரசு உதவி பெறும் பள்ளிகள் மற்றும் மன்னார்குடி ஒன்றியத்தில் இருந்து வரும் 121அரசு , அரசு உதவிபெறும் பள்ளிகள் 104 பள்ளிகளில் பள்ளிக் கல்வித்துறை வழங்கி உள்ள வழிகாட்டு அறிவுரைகளை பின்பற்றி பள்ளிகளில் அனைத்து முன்னே ற்பாடுகளும் செய்யப்பட்டு தயார் நிலையில் உள்ளது.
இந்த நிலையில், மன்னார்குடி மற்றும் கோட்டூர் வட்டாரங்களில் இருந்து வரும் அரசு , அரசு உதவி பெறும் பள்ளிகளில் கல்வி பயின்று வரும் மாணவர்களின் நலன் கருதி அவர்களுக்கு 2025- 2026ம் கல்வியாண்டிற்கான அரசின் விலையில்லா பாடப்புத்தகங்கள் அந்தந்த பள்ளிகளுக்கு அனுப்பும் பணிகள் மும்மூரமாக நடந்து வருகிறது. இப்பணிகள் அனைத்தும் மன்னார்குடி வட்டார கல்வி அலுவலர்கள் சிவக் குமார், ஜான்சி எமிலி, தாமோதரன், கோட்டூர் வட்டார கல்வி அலுவலர்கள் இராமசாமி, விர்ஜின் ஜோனா ஆகியோர் முன்னிலையில் நடந்து வருகிறது. கோடை வெயிலின் தாக்கத்தால் பள்ளி திறப்பு தள்ளிப் போகலாம் என்கிற நிலையில்,கோடை மழை கொட்டோ கொட்டென கொட்டி வெப்பச் சூழலை குளிர்காலச் சூழலாக மாற்றியுள்ளதால் மாணவர்களை பெற்றோர்கள் பள்ளி க்கு அனுப்பவும், மாணவர்கள் பள்ளிக்கு செல்லவும் ஆர்வமுடன் தயாராகி வருகின்றனர்.