சேலம், ஆக.22: சேலம் மாவட்டம் ஓமலூர் பக்கமுள்ள மாட்டுக்காரனூர் இந்திராநகரைச் சேர்ந்தவர் திருநாவுக்கரசு(42). இவர் சேலம் அரசு மருத்துவமனையில் சலவை தொழிலாளியாக வேலை செய்து வருகிறார். நேற்றுமுன்தினம் அவரது டூவீலரை அங்கேயே நிறுத்திவிட்டு மதியம் சாப்பிடுவதற்காக சென்றார். திரும்பிவந்து பார்த்தபோது டூவீலரை காணவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த அவர் அரசு மருத்துவமனை போலீஸ் ஸ்டேசனில் புகார் செய்தார். வழக்கு பதிவு செய்த போலீசார், அங்கிருக்கும் சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்து வருகின்றனர்.
ஜி.ஹெச்., ஊழியரின் டூவீலர் திருட்டு
previous post