கரூர், ஆக.20: தமாகா நிறுவனர் ஜி.கே.மூப்பனாரின் 91வது பிறந்தநாளை முன்னிட்டு கரூர் மாவட்ட தமாகா சார்பில் மூப்பனார் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. கரூர் மாவட்ட தமிழ் மாநில காங்கிரஸ் சார்பில் கட்சி அலுவலகத்தில் முன்னாள் எம்பியும், மாநில ஒழுங்கு நடவடிக்கை குழு தலைவருமான கே.நாட்ராயன் தலைமையில் ஜி.கே. மூப்பனார் 91வது பிறந்த தினத்தை முன்னிட்டு அவரது திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செய்தனர். நிகழ்ச்சியில் மேற்கு மாவட்ட தலைவர் திருமூர்த்தி, நகரத் தலைவர் ஆர்.சி .ஏ.ஜெகநாதன், மாவட்ட செயலாளர் ராமசாமி, இனாம் கரூர் நகரத் தலைவர் சிங்காரம், நகர செயலாளர்கள் முருகேசன் ,சுந்தர்ராஜ், பாலு, மகளிர் அணி அன்னலட்சுமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.