கோவை, மே 21: கோவை ஜி.கே.என்.எம் மருத்துவமனையில் தமிழ்நாடு கதிர்வீச்சு சிகிச்சை தொழில்நுட்ப வல்லுநர்களின் 2வது கருத்தரங்கம் நடைபெற்றது. இம்மருத்துவமனையின் தலைமை மருத்துவ அதிகாரி டாக்டர். ஜி. மனோகரன் இக்கருத்தரங்கை துவக்கி வைத்தார்.
‘கதிர்வீச்சு சிகிச்சை தொழில்நுட்பத்தின் முன்னேற்றங்கள் – கோட்பாட்டிலிருந்து யதார்த்தமான நடைமுறை வரையில்’ என்ற கருத்தினை மையப்பெருளாக கொண்டு இக்கருத்தரங்கம் நடைபெற்றது. இதில் தமிழ்நாடு முழுவதிலும் உள்ள பல்வேறு மருத்துவமனைகள் மற்றும் மருத்துவ கல்லூரிகளிலிருந்து சுமார் 200 பிரதிநிதிகள் கலந்துகொண்டனர். இவர்கள் நடைமுறைகள் மற்றும் ஆழமன நுண்ணறிவுகளைப் பெற்றனர்.