தண்டராம்பட்டு, ஜூலை 1: தண்டராம்பட்டு அடுத்த ஜி.குப்பந்தங்கல் கிராமத்தைச் சேர்ந்த கோவிந்தசாமி(70), மனைவி மாங்கனி(62). இவர்களுடைய மகன் ராம்குமார்(36) குடிபோதையில் 22.4.2020 அன்று பெற்றோர் இருவரும் தூங்கிக் கொண்டிருந்தபோது தலையில் கல்லை போட்டு இருவரையும் கொலை செய்துவிட்டார். சாத்தனூர் அணை போலீசார் ராம்குமாரை கைது செய்து வேலூர் சிறையில் அடைத்து வைக்கப்பட்டிருந்தார். கடந்த நான்கு மாதத்திற்கு முன்பாக ஜாமினில் வெளியே வந்துள்ளார். இந்நிலையில் நேற்று காலை வீட்டின் உள்ளே ராம்குமார் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவலை அறிந்த சாத்தனூர் அணை போலீசார் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
ஜாமினில் வெளிய வந்த குற்றவாளி தற்கொலை
0
previous post