அஞ்சுகிராமம்,ஆக.3: அஞ்சுகிராமம் ஜாண்ஸ் சென்ட்ரல் பள்ளியில் 2024 – 2025ம் ஆண்டிற்கான, மாணவர் பேரவைத் தேர்தலில் வெற்றி பெற்றவர்களுக்கான பதவியேற்பு விழா நடந்தது. நிர்வாகத் தலைவர் டாக்டர் ஜாண் வில்சன் தலைமை வகித்தார். பள்ளி தாளாளர் ஜெ.ஜெபில் வில்சன், முதல்வர் ஜெ. ஷெரின் சந்திரலீலா ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு விருந்தினராக விவேகானந்தா கல்லூரி துறை தலைவர் பேராசிரியர் டாக்டர் சுஜாதா பங்கேற்று பேசினார். பதவியேற்கும் மாணவர்களின் அணிவகுப்பு, குழு வாரியான அணிவகுப்பு நடந்தது. தொடர்ந்து 12ம் வகுப்பை சேர்ந்த மாணவன் ஜாண் மாணவர் பேரவை தலைவராகவும், மாணவி ஆன்லின் செரிஷ்மா மாணவ தலைவியாகவும், துறை சார்ந்த மாணவ, மாணவியர்களும் பதவிப் பிரமாணம் ஏற்று உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். விழா ஏற்பாடுகளை ஆசிரியர்கள் செய்திருந்தனர்.
ஜாண்ஸ் சென்ட்ரல் பள்ளியில் மாணவர்கள் பதவியேற்பு விழா
previous post