போச்சம்பள்ளி, ஜூன் 27: மத்தூர் பகுதியில், தாசில்தார் சத்யா தலைமையிலான குழுவினர், ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, சந்தேகத்திற்கிடமாக வந்த டிப்பர் லாரியை நிறுத்துமாறு சைகை செய்தனர். அதிகாரிகளை கண்டதும், வண்டியை நிறுத்தி விட்டு டிரைவர் மற்றும் உடன் வந்தவர்கள், கீழே குதித்து ஓட்டம் பிடித்தனர். இதனையடுத்து, அந்த லாரியில் சோதனையிட்டபோது, 10 யூனிட் ஜல்லி கற்கள் கடத்தி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து, லாரியை கைப்பற்றி போச்சம்பள்ளி போலீஸ் ஸ்டேஷனில் அதிகாரிகள் ஒப்படைத்தனர். போலீசார் வழக்குப்பதிந்து ஜல்லி கற்கள் கடத்தி வந்த லாரி உரிமையாளர் மற்றும் டிரைவர் குறித்து விசாரித்து வருகின்றனர்.