போச்சம்பள்ளி, ஜூலை 4: போச்சம்பள்ளி தாசில்தார் சத்யாவிற்கு, ஜல்லிகற்கள் கடத்துவதாக ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து அவர், மத்தூர் தேசிய நெடுஞ்சாலையில் அதிகாரிகளுடன் வாகன தணிக்ைக மேற்கொண்டார். அப்போது கொடமாண்டப்படி கூட்ரோடு பகுதியில் டிப்பர் லாரி வந்து கொண்டிருந்தது. திடீரென வாகனத்தை நிறுத்தி விட்டு 2 பேர் தப்பியோடினர். பின்னர் லாரியை தாசில்தார் சோதனையிட்டார். அதில், 2 யூனிட் ஜல்லிகற்கள் கடத்திச் சென்றது தெரியவந்தது. அதனை தொடர்ந்து டிப்பர் லாரியை பறிமுதல் செய்து மத்தூர் போலீசில் ஒப்படைத்தனர். புகாரின்பேரில், லாரியை ஓட்டி வந்த டிரைவர் மற்றும் உரிமையாளரை போலீசார் தேடி வருகின்றனர்.
ஜல்லி கடத்திய லாரி பறிமுதல்
0
previous post