சேந்தமங்கலம், ஜூன் 26: கொல்லிமலை மேல்கலிங்கத்தில் இருந்து, தெம்பளம் செல்லும் சாலையை சீரமைக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
நாமக்கல் மாவட்டத்தில் சிறந்த சுற்றுலா தலமாக கொல்லிமலை இருந்து வருகிறது. தமிழகம் மட்டுமல்லாமல் அண்டை மாநிலமான ஆந்திரா, கர்நாடகா, கேரளா, பாண்டிச்சேரியில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். அரியூர் நாடு ஊராட்சியில் உள்ள மேல்கலிங்கத்தில் இருந்து, தெம்பலம் செல்லும் சாலை, ஜல்லிக்கற்கள் பெயர்ந்து குண்டும், குழியுமாக மாறியுள்ளது. இதனால் பொதுமக்கள் சாலையை பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இந்த சாலையை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் ஊராட்சி நிர்வாகத்திடம் பல முறை கோரிக்கை விடுத்தும், இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை.
இதுகுறித்த அப்பகுதி மக்கள் கூறுகையில், ‘மேல்கலிங்கத்தில் இருந்து நூற்றுக்கு மேற்பட்ட மாணவ, மாணவிகள் அரசு துவக்கப்பள்ளி, தெம்பளம் மேல்நிலைப்பள்ளிக்கு சென்று வருகின்றனர். சாலையில் ஜல்லிக்கற்கள் பெயர்ந்து குண்டும், குழியுமாக உள்ளதால் மாணவ, மாணவிகள் நடந்து செல்ல முடியாத நிலை இருந்து வருகிறது. தொடர் மழையால் மேலும் பழுதடைந்து உள்ளது. அறப்பளீஸ்வரர் கோயிலுக்கு செல்லும் சுற்றுலா பயணிகள், இந்த சாலை வழியாக தான் சென்று வருகின்றனர். இப்பகுதி மக்கள் இரவு நேரத்தில் டூவீலரில் வருபவர்கள் தவறி விழுந்து படுகாயம் அடைகின்றனர். எனவே, மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்து, இந்த சாலையை சீரமைக்க வேண்டும்,’ என்றனர்.
ஜல்லிக்கற்கள் பெயர்ந்த தெம்பளம் தார்சாலை
0
previous post