ஊத்தங்கரை, ஜூலை 4: கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி அருகே கொண்டிரெட்டிப்பட்டி கிராம நிர்வாக அதிகாரி சங்கர் மற்றும் அதிகாரிகள், மத்தூர் ஊத்தங்கரை செல்லும் பகுதியில், கொடமாண்டப்பட்டி பிரிவு சாலையில் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது அவ்வழியாக வந்த லாரியை நிறுத்தி சோதனை செய்தனர். அதில், 2 யூனிட் ஜல்லி கற்கள் கடத்தி வந்திருப்பது தெரிந்தது. இதையடுத்து அந்த லாரியை அதிகாரிகள் பறிமுதல் செய்து, மத்தூர் போலீசில் ஒப்படைத்து புகார் அளித்தனர். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் பத்மாவதி வழக்கு பதிவு செய்து, லாரி டிரைவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
ஜல்லிக்கற்கள் கடத்திய லாரி டிரைவர் கைது
0
previous post