கோவை, ஜூன் 14: கோவை சிங்கநல்லூர் பகுதியை சேர்ந்தவர் மாணவர் அபய்தேவ் (10). இவர் கடந்த 2 ஆண்டுகளாக யோகா கற்று வருகிறார். இந்நிலையில், மலேசியாவில் உள்ள லிங்கன் பல்கலை.யில் சர்வதேச யோகா போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் இந்தியா, மலேசியா, சிங்கப்பூர், தாய்லாந்த் மற்றும் ஸ்ரீலங்கா ஆகிய நாடுகளில் இருந்து போட்டியாளர்கள் கலந்து கொண்டனர். இதில் மாணவர் அபய்தேவ் இந்தியா சார்பாக கலந்து கொண்டார்.
இந்த போட்டியில் ஆர்டிஸ்டிகல் யோகா பிரிவில் பங்கேற்ற அபய்தேவ் விருச்சிகாசனா, பூரண சலபாசனா, பூரண புஜகாசனா, ஹாலாசனா ஆகியவற்றை செய்து முதல் பரிசை வென்றார். இந்த போட்டியில் வெற்றி பெற்றது மூலம் மாணவர் அபய்தேவ் 2025ம் ஆண்டு ஜப்பானில் நடைபெறும் சர்வதேச யோகா போட்டிக்கு தேர்வாகியுள்ளார். மேலும், மலேசியாவில் இருந்து கோவை வந்த அபய்தேவ், கோவை மாநகர போலீஸ் கமிஷனர் பால கிருஷ்ணனை சந்தித்து வாழ்த்து பெற்றார்.