சோழவந்தான், ஆக. 5: சோழவந்தானில் சுற்றுச்சூழல் துறை மற்றும் பேரூராட்சி நிர்வாகம் இணைந்து சுற்றுச்சூழலை மாசுபடுத்தும் பிளாஸ்டிக் கேரி பைகளை தவிர்க்க வலியுறுத்தி விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. பேரூராட்சி தலைவர் ஜெயராமன் தலைமை வகித்தார். திமுக பேரூர் செயலாளர் சத்தியபிரகாஷ் முன்னிலை வகித்தார். தூய்மை பணி ஆய்வாளர் முருகானந்தம் வரவேற்றார்.
செயல் அலுவலர் சகாய அந்தோனி யூஜின், மாசுக்கட்டுப்பாட்டு வாரிய பொறியாளர் உஷாராணி ஆகியோர் கேரிப்பை உள்ளிட்ட பிளாஸ்டிக் பொருட்களினால் ஏற்படும் தீமைகள் குறித்தும், வியாபாரிகள், பொதுமக்கள் இவற்றை முற்றிலும் தவிர்க்க வலியுறுத்தியும் பேசினர். பின்னர் ஜெனகை மாரியம்மன் கோயில் அருகில் பொதுமக்களுக்கு மஞ்சள் பைகள் வழங்கப்பட்டது. இதில் பேரூராட்சி கவுன்சிலர்கள், பணியாளர்கள் கலந்து கொண்டனர்.