மதுரை, ஜூன் 20: மதுரை – திண்டுக்கல் நெடுஞ்சாலையில் வாடிபட்டியிலிருந்து மேலூர் அருகே உள்ள சிட்டம்பட்டியை இணைக்கும் வகையில் வெளிவட்ட சாலை அமைக்கும் பணி நடந்து வருகிறது. இத்திட்டத்தின் கீழ் ஒருங்கிணைந்த ஜவுளி பூங்கா அருகில் துவங்கி, கச்சைக்கட்டி பிரிவு வரை சுமார், 1 கி.மீ நீளத்துக்கு புதிதாக பாலம் கட்டப்பட்டு வருகிறது. முதலில் சோழவந்தான் சந்திப்பு வரை கட்ட முடிவு செய்த நிலையில், பல்வேறு காரணங்களால் திட்டத்தில் மாற்றம் செய்யப்பட்டு கச்சைக்கட்டி பிரிவு வரை கட்டப்படுகிறது.
இதனால், ஆண்டிபட்டி பங்களா சந்திப்பிற்கு உட்பட்ட சோழவந்தான் பிரிவில் விபத்துக்கள் நடக்க வாய்ப்புள்ளது. எனவே, சோழவந்தான் பிரிவில் புதிதாக மேம்பாலம் கட்டுவதற்கு தேசிய நெடுஞ்சாலை ஆணையம் முன்வர வேண்டும் என, அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.