சிவகங்கை, ஜூலை 4: சிவகங்கை அருகே சோழபுரம் அருள்மொழி நாதர் அறம் வளர்த்த நாயகி அம்மன் கோவில் ஆனித் திருவிழா நடைபெற்றது.
ஆனித்திருவிழா கடந்த 29ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. பத்து நாட்கள் திருவிழாவில் தினமும் காலை மாலை சுவாமி, அம்மன் ரிஷபம், கிளி, யானை உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் புறப்பாடு நடைபெற்று வருகிறது. வருகின்ற 6ம் தேதி திருக்கல்யாணம், 7ம் தேதி தேரோட்டம் நடைபெற உள்ளது. இந்நிலையில் 5ம் நாள் விழாவான நேற்று காலை ஆறூர் வட்டகை நாடு சார்பில் கேடகம் வாகனத்திலும் இரவு யானை வாகனத்திலும் அம்மனுக்கு மேளதாளங்கள் முழங்க பஞ்சமூர்த்தி புறப்பாடுகள் நடைபெற்றது. இதில் ஒருங்கிணைப்பாளர் மணிகண்டன், கிராம மக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். விழாவிற்கான ஏற்பாடுகளை தேவஸ்தான கண்காணிப்பாளர் வேல்முருகன் மற்றும் கிராம மக்கள் செய்து வருகின்றனர்.