தா.பழூர், அக்.20: அரியலூர் மாவட்டம், தா.பழூர் ஊராட்சி ஒன்றியம், சோழன்மாதேவி ஊராட்சியில், உடையார்பாளையம் கோட்டம் தமிழ்நாடு அரசு கால்நடை பராமரிப்புத்துறை, சார்பில், சிறப்பு கால்நடை சுகாதாரம் மற்றும் விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. முகாமை க.சொ.க.கண்ணன் எம்எல்ஏ துவக்கி வைத்தார். கால்நடை மண்டல இணை இயக்குநர் மருத்துவர் ஹமிது அலி, உதவி இயக்குநர் மருத்துவர் ரமேஷ், வேளாண் கிரீடு அறிவியல் மைய தலைவர் அழகுகண்ணன்,
ஊராட்சி தலைவர் ஜெயலெட்சுமி, பொதுக்குழு முன்னாள் உறுப்பினர் அண்ணாதுரை, மாவட்ட விவசாய தொழிலாளரணி அமைப்பாளர் ராமதுரை, ஒன்றிய அவைத் தலைவர், சூசைராஜ், பொருளாளர் நாகராஜன், ஒன்றிய துணை செயலாளர் சாமிதுரை, மாவட்ட பிரதிநிதிகள் தமிழ்ச்செல்வன், கோவி.சீனிவாசன், மாவட்ட அணி துணை அமைப்பாளர்கள் கார்த்திகை குமரன், பாலசுப்ரமணியன், குணசீலன், எழிலரசி , முனைவர் முருகானந்தம், தங்கபிரகாசம் மற்றும் மருத்துவ அலுவலர்கள், கால்நடை பணியாளர்கள், கால்நடை விவசாயிகள், பொதுமக்கள் கலந்துகொண்டனர்.