அழகர்கோவில், ஆக. 30: மதுரை மாவட்டம் வலையங்குளத்தில் கடந்த ஆக.20ம் தேதி அதிமுகவின் எழுச்சி மாநாடு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் நடைபெற்றது.இந்த மாநாடு சிறப்பாக நடைபெற்றதையொட்டி மதுரை கிழக்கு புறநகர் மாவட்ட செயலாளரும் திருப்பரங்குன்றம் சட்டமன்ற உறுப்பினருமான ராஜன் செல்லப்பா ஏற்பாட்டின் பெயரில் மதுரை அழகர்கோவில் பதினெட்டாம் படி கருப்பணசாமி சன்னதியில் வழிபாடு செய்தும், மலைமேல் அமைந்துள்ள முருகனின் 6வது படைவீடான சோலைமலை முருகன் கோயிலில் தங்க தேர் இழுத்தும் பக்தர்களுக்கு அன்னதானமும் வழங்கினர். இந்நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், செல்லூர்ராஜூ, ஆர்.பி.உதயக்குமார், மேலூர் எம்எல்ஏ பெரியபுள்ளான் மற்றும் கட்சி நிர்வாகிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.