கோத்தகிரி, மே 28: கோத்தகிரி அருகே சோலூர் மட்டம் பகுதியில் பலத்த காற்று வீசியதால் அரசு உயர்நிலைப்பள்ளியின் மேற்கூரை விழுந்தது. கோடை விடுமுறை என்பதால் மாணவர்கள், ஆசிரியர்கள் யாரும் இல்லாததால் அதிர்ஷ்டவசமாக அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.
நீலகிரி மாவட்டத்திற்கு வானிலை ஆய்வு மையம் கடந்த 3 நாட்களாக சிவப்பு நிற எச்சரிக்கையும் தொடர்ந்து, மஞ்சள் நிற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில் மாவட்டத்தில் கடந்த நான்கு நாட்களாகவே காற்றுடன் கூடிய அதிக கன மழை பெய்து வருகிறது.
இதனால் ஆங்காங்கே மரங்கள் விழுந்தும், மண் சரிவு ஏற்பட்டும் வருகிறது. இந்நிலையில் கோத்தகிரி அதன் சுற்றுவட்டார பகுதியில் காற்றுடன் கூடிய கனமழை பெய்து வந்தது. இந்த நிலையில் பலத்த காற்று வீசியதால் கோத்தகிரி அருகே உள்ள சோலூர் மட்டம் அரசு உயர்நிலைப்பள்ளியின் மேற்கூரை விழுந்து சேதமடைந்தது.
தற்போது பள்ளிகள் கோடை விடுமுறை என்பதால் மாணவர்கள், ஆசிரியர்கள் யாரும் இல்லாததால் பெரும் அசம்பாவிதம் தவிக்கப்பட்டது. இந்நிலையில் பள்ளியின் மேற்கூரை விழுந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.