காரைக்குடி, செப். 12: நடப்பு 2023-2024ம் அரையாண்டுக்கான சொத்துவரியை வரும் அக்டோபர் 31ம் தேதிக்குள் கட்டினால் 5 சதவீதம் ஊக்கத்தொகை வழங்கப்படும் என ஆணையர் வீரமுத்துக்குமார் தெரிவித்தார். இதுகுறித்து அவர் தெரிவித்துள்ளதாவது, காரைக்குடி நகராட்சிக்கு செலுத்த வேண்டிய சொத்துவரி, குடிநீர் கட்டணம், காலிஇட வரி, தொழில்வரி, நகராட்சி கடைகளுக்கான வாடகை மற்றும் குத்தகை தொகை ஆகியவற்றை உடனடியாக செலுத்தவேண்டும்.
நகராட்சி அலுவலகத்தில் உள்ள வரிவசூல் மையம் அல்லது கல்லுகட்டி பகுதியில் உள்ள நகராட்சி வரிவசூல் மையத்தில் செலுத்தலாம். மேலும் 2023-2024 இரண்டாம் அரையாண்டுக்கான சொத்துவரியை அக்டோபர் 31ம் தேதிக்குள் செலுத்தினால் 5 சதவீத ஊக்கத்தொகை வழங்கப்படும். இதனை பொதுமக்கள் மற்றும் வணிக நிறுவனங்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என தெரிவித்துள்ளார்.