கரூர்: சொட்டு நீர் பாசன முறையின் நன்மைகள் குறித்து வேளாண்மைத் துறை வழிகாட்டியுள்ளது. இதுகுறித்து சொட்டு நீர் பாசன முறையில் உள்ள நன்மைகள் குறித்து வேளாண்மைத்துறை சார்பில் தெரிவித்துள்ளதாவது: தேவைப்படும் ஈரம் பாதுகாக்கப்படுகிறது. தண்ணீர் பற்றாக்குறை மற்றும் உப்பு பிரச்னை உள்ள இடங்களில் நீர்பாசனம் சிறப்பான ஒன்றாகும். களைகள் குறைகிறது. கிடைக்கின்ற, இருக்கின்ற நீரை பயன்படுத்திக் கொண்டு சாகுபடியின் பரப்பை அதிகரிக்கலாம். வேலையாட்களின் தேவையும் குறைகிறது. மேல்பகுதியில் உரங்கள் இடுவதால் உரங்கள் மிச்சப்படுத்தப்படுகிறது. மேலும் சொட்டுநீர் பாசனம் முறையை பயன்படுத்துவதால் நீர் மேலாண்மை செய்யப்படுகிறது. பயிரின் வளர்ச்சி, முதிர்ச்சி மற்றும் காய்கள் ஒரே அளவாக இருக்கும். பூச்சி மற்றும் நோயின் தன்மை குறைகிறது. மண் இறுக்கம் அதிகமாக ஏற்படுவதில்லை. இதனால், வேர் வளர்ச்சி அதிகரிக்கிறது. பயிர்களுக்கு இடையே சாகுபடி பணிகள் செய்வது எளிதாகிறது. குறைந்த செலவில் அதிக லாபம் கிடைக்கிறது. எனவே, சொட்டு நீர் பாசன முறையை கடைபிடிக்க வேண்டும் என தெரிவிக்கப்படுகிறது.