காரிமங்கலம், மே 14: தர்மபுரி மாவட்டம், காரிமங்கலம் வழியாக குட்கா கடத்தப்படுவதாக எஸ்பி மகேஸ்வரனுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, காரிமங்கலம் போலீசார் கண்காணிப்பு பணியை தீவிரப்படுத்தினர். அப்போது, மாட்லாம்பட்டி அருகே சந்தேகத்திற்கிடமாக வேகமாக வந்த சொகுசு காரை நிறுத்துமாறு போலீசார் சைகை செய்தனர். போலீசாரை கண்டதும் காரை நிறுத்தி விட்டு டிரைவர் தப்பியோட முயன்றார். போலீசார் அவரை மடக்கி பிடித்தனர். விசாரணையில், அவர் ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த மகேந்திரகுமார்(21) என்பதும், கர்நாடகா மாநிலம் பெங்களூருவில் இருந்து மதுரைக்கு காரில் குட்கா கடத்திச் செல்வதும் தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர். ரூ.2 லட்சம் மதிப்பிலான 450 கிலோ குட்கா மற்றும் காரை போலீசார் கைப்பற்றினர். பின்னர், மகேந்திரகுமாரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையிலடைத்தனர்.
சொகுசு காரில் குட்கா கடத்திய வாலிபர் கைது
0
previous post