சேந்தமங்கலம், ஜூன் 13: நாமக்கல் மாவட்டம், சேந்தமங்கலம் அருகே கொல்லிமலை அடிவாரம் பள்ளம்பாறை பகுதியில், சேவல் சண்டை சூதாட்டம் நடப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதன்பேரில், நேற்று மாலை, சேந்தமங்கலம் எஸ்ஐ தமிழ்க்குமரன் மற்றும் போலீசார் அப்பகுதிக்கு விரைந்தனர். அப்போது, 10க்கும் மேற்பட்ட சேவல்களை வைத்து சூதாடிக் கொண்டிருந்தவர்கள், போலீசாரை கண்டதும் சேவல்களுடன் 3 கார்களில் ஏறி தப்பிச் சென்றனர். இதையடுத்து, அங்கிருந்த ஒரு சேவல் மற்றும் ரூ.11,500 பணத்தை போலீசார் கைப்பற்றினர். இதுதொடர்பாக ராசிபுரம் பகுதியைச் சேர்ந்த கல்லூரி மாணவர்கள் உள்பட 5 பேர் மீது வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.
சேவல் சண்டை சூதாட்டம்
0
previous post