வடமதுரை, ஆக.6: வடமதுரை அருகே சேவல் சண்டை சூதாட்டத்தில் ஈடுபட்ட 6 பேரை போலீசார் கைது செய்தனர். வடமதுரை கன்னிமார்பாளையம் கிராமத்தில், எஸ்.ஐ சித்திக் தலைமையிலான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த பகுதியில் சேவல் சண்டை சூதாட்டம் நடத்திய கண்ணன் (35), பாலசுப்பிரமணி (36), ராஜ்குமார் (28), குழந்தைவேல் (59), வெங்கடேஷ் (37), சந்தோஷ் (19) ஆகிய ஆறு பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்களிடமிருந்து இரண்டு சேவல், டூவீலர்கள் மற்றும் ரூ.3,500 பணத்தை போலீசார் பறிமுதல் செய்தனர்.
சேவல் சண்டை சூதாட்டம்: 6 பேர் கைது
previous post