Friday, June 13, 2025
Home மாவட்டம்சேலம் சேலம் சுகவனேஸ்வரர் கோயிலில் கொடியேற்றம்: 9ம் தேதி ேதரோட்டம்

சேலம் சுகவனேஸ்வரர் கோயிலில் கொடியேற்றம்: 9ம் தேதி ேதரோட்டம்

by MuthuKumar

சேலம், ஜூன் 2: சேலம் சுகவனேஸ்வரர் கோயிலில் நேற்று காலை கொடியேற்றம் நடந்தது. வரும் 9ம் தேதி வைகாசி விசாக தேரோட்டம் நடக்கிறது. சேலம் மாநகரில் பிரசித்தி பெற்ற சுகவனேஸ்வரர் கோயில் உள்ளது. இக்கோயிலில் ஒவ்வொரு ஆண்டும் வைகாசி விசாக தேரோட்டம் விமரிசையாக கொண்டாடப்படும். நடப்பாண்டு வைகாசி விசாக தேரோட்டம் வரும் 9ம் தேதி நடக்கிறது.

நேற்று காலை கோயிலில் கொடியேற்ற விழா நடைபெற்றது. முன்னதாக காலை உற்சவர்கள் சுகவனேஸ்வரர், சொர்ணாம்பிகை அம்மனுக்கு பால், இளநீர், பன்னீர், தயிர், பஞ்சாமிர்தம், விபூதி, சந்தனம் உள்பட பல்வேறு திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் நடந்தது. பின்னர், சுவாமிகள் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தனர். இந்நிகழ்ச்சியில் சோனா கல்வி நிறுவனங்களின் தலைவரும், அறங்காவலர் குழு தலைவருமான வள்ளியப்பா மற்றும் அறங்காவலர்கள், கோயில் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

இன்று (2ம் தேதி) இரவு உற்சவர்கள் சிம்ம வாகனத்திலும், 3ம் தேதி இருதலைப்பட்சி வாகனத்திலும், 4ம் தேதி நாக வாகனத்திலும் புறப்பாடு நடக்கிறது. 5ம் தேதி மாலை 4 மணி முதல் 5.30 மணிக்குள் திருக்கல்யாண உற்சவம் நடக்கிறது. 9ம் தேதி அதிகாலை 4 மணிக்கு சிறப்பு அபிஷேகம், பூஜைகள் மற்றும் வழிபாடு, காலை 7 மணிக்கு சுவாமி தேரில் எழுந்தருளல், 9.30 மணிக்கு தேரோட்டம் நடக்கிறது. இவ்விழாவையொட்டி சேலம் தேர்நிலையம் பகுதியில் உள்ள தேர் அலங்கரிக்கும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது.

You may also like

Leave a Comment

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi