திருமங்கலம், மே 22: மதுரை அருகே பெற்றோர் வீட்டிற்கு வந்த மனைவி சேர்ந்து வாழ வரமறுத்ததால் கணவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.தேனி மாவட்டம் வட புதுப்பட்டியை சேர்நதவர் விஜயபாஸ்கர்(40). இவரது மனைவி ரேவதி(35). இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். குடும்பப் பிரச்னையில் ரேவதி கோபித்துக்கொண்டு மதுரை மாவட்டம் நிலையூரில் உள்ள தனது பெற்றோர் வீட்டிற்கு வந்துவிட்டார்.
மனைவியை சமரசம் செய்து அழைத்து செல்ல நேற்று முன்தினம் விஜயபாஸ்கர் மாமனார் வீட்டிற்கு வந்துள்ளார்.மனைவியை சமாதனம் செய்து ஊருக்கு அழைத்தபோது அவர் வரமறுத்துவிட்டார். இதனால் மனவிரக்தியடைந்த விஜயபாஸ்கர் நிலையூர் கண்மாய் கரையில் உள்ள மரத்தில் தூக்குமாட்டி தற்கொலை செய்துகொண்டார். தகவல் அறிந்த ஆஸ்டின்பட்டி போலீசார் விஜயபாஸ்கர் உடலை மீட்டு திருமங்கலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். இந்த தற்கொலை குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.