வீரவநல்லூர்,செப்.6: சேரன்மகாதேவி ஸ்காட் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில் நடப்பு கல்வியாண்டுக்கான முதலாம் ஆண்டு வகுப்புகளின் துவக்க விழா மற்றும் மாணவர்கள் அறிமுக விழா நடந்தது. சேர்மன் கிளிட்டஸ்பாபு தலைமை வகித்துப் பேசினார். பொது மேலாளர் தம்பிதுரை முன்னிலை வகித்தார். கல்லூரி முதல்வர் ஜஸ்டின் திரவியம் வரவேற்றார். விழாவில் கல்லூரியின் சிறப்பம்சங்கள், பயிலும் போதே வேலைவாய்ப்பு கிடைக்க அனுக வேண்டிய முறைகள் உள்ளிட்ட பல்வேறு ஆலோசனைகள் மாணவர்களுக்கு வழங்கப்பட்டது. விழாவில் மாணவர் சேர்க்கைக்ககான இயக்குநர் ஜான் கென்னடி, கல்வியியல் பேராசிரியர் எபென்ஸ் நிக்ஷ்யா மற்றும் மாணவர்கள், பெற்றோர் கலந்து கொண்டனர். பேராசிரியர் சுந்தரராஜன் நன்றி கூறினார்.