வீரவநல்லூர்,ஆக. 3: சேரன்மகாதேவி தாமிரபரணி நதிக்கரையில் அமைந்துள்ள பொழிக்கரை சுடலை ஆண்டவர் கோயிலில் வருகிற ஆக.5, 6ம் தேதி கொடை விழா நடைபெறுகிறது. இதை முன்னிட்டு 5ம் தேதி இரவு 7 மணிக்கு கொடைவிழா ஆரம்பமாகிறது. இரவு 12 மணிக்கு சாஸ்தா பிறப்பு (வில்லிசை), இரவு 1 மணிக்கு ராமாயணம் (வில்லிசை), இரவு 4 மணிக்கு அம்மன் கதை (மகுடம்) நடைபெறுகிறது. இதையடுத்து 6ம் தேதி காலை 6 மணிக்கு அம்மன் வழிபாடும், மதியம் 11 மணிக்கு உச்சிக்கால பூஜை, மதியம் 12 மணிக்கு பூக்குழி இறங்குதல், மதியம் 1 மணிக்கு அன்னதானம் நடைபெறுகிறது. தொடர்ந்து மாலை 4 மணிக்கு இசக்கி அம்மன் சிலை எடுத்து வரும் நிகழ்ச்சியும், இரவு 10 மணிக்கு அலங்கார தீபாராதனை, இரவு 12 மணிக்கு கைவெட்டு, திரளை கொடுத்தல், இரவு 1 மணிக்கு சாம பூஜை, படைப்பு தீபாராதனை உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது. பொதுமக்கள் குடும்பத்துடன் வருகை தந்து கொடை விழாவை கண்டுகளிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை இந்து நாடார் மகமை கமிட்டியினர் செய்துள்ளனர்.
சேரன்மகாதேவி பொழிக்கரையில் ஆக.5, 6ம்தேதி சுடலை ஆண்டவர் கோயில் கொடை விழா
previous post